Thursday, July 16, 2009

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!
'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல், . . .
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!
(நண்பன் மின்னஞ்சலில் அனுப்பியது)

22 comments:

  1. நண்பன் அதனாலதாan கலக்கலா அனுப்பியிருக்கிறார் . நல்லா இருக்கு .

    ReplyDelete
  2. நன்றிங்க சுரேஷ்

    ReplyDelete
  3. தலைப்பு அருமை.


    நல்ல பகிர்தல் - கவிதை நலம்.

    ReplyDelete
  4. பேச்சு நடையில் அருமையான எதுகை மோனை தாள லயத்துடன் இருக்கிறது கவிதை... நல்ல பகிர்தல் சுப்பு

    ReplyDelete
  5. ரொம்ப அழகான கவிதைங்க...! பாதி வரைக்கும் படிச்சப்பறம் எங்கயோ படிச்ச மாறி இருக்கேனு நெனச்சிக்கிட்டே மிச்சத்தையும் படிச்சேன்.. முன்னமே படிச்சிருந்தாலும் அது இந்தளவுக்கு முழுசா ஞாபகம் இல்ல எனக்கு... மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி!!!

    ReplyDelete
  6. நன்றிங்க ப்ரியங்கா

    ReplyDelete
  7. நன்றிங்க ஜமால் & ரீனா

    ReplyDelete
  8. ஹல்லோ

    அருமையான சுவையான ஆழமான கருத்தினைக் கொண்ட கவிதை - நட்பு என்பதனை என்ன என்று அலசி ஆராய்ந்து இது தான் நட்பென நிலைநாட்டும் கவிதை

    நல்வாழ்த்துகள்

    ரசித்தேன் மனதார

    ReplyDelete
  9. பகிர்தலுக்கு நன்றி. நம்ம திண்ணைக்கு வந்து விருதை ஏத்துக்குங்க சுப்பு.

    ReplyDelete
  10. நன்றிங்க

    சீனா,
    பாலா,
    காயு :)))))))

    ReplyDelete
  11. நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

    அருமை .

    வாங்க நம்ம பதிவுக்கும்

    ReplyDelete
  12. hai subbu ungaluku en blogla oru award koduthu iruken vanthu parunga pa

    ReplyDelete
  13. நல்லா இருக்குன்னு நண்பர் கிட்ட சொல்லுங்க. ஆனாலும் கொஞ்சம் நீளமா இருக்கு. :)

    ReplyDelete
  14. கவிதை அருமை நண்பா..

    ReplyDelete
  15. தலீவா !! உண்மைக்கி சொன்னா !! தூளு டக்கரு தான் போ !! இன்னா மேரி வரிங்கோ அல்லாம் !! நண்பன்னு ஒர்த்தன் இருந்தா தான் தலீவா !! அதோட நிறைவு தெரியும் !! ஆனா எது உண்மைக்கி நட்பு இன்னு நாம தான் தெரிஞ்சிக்கணும் . ஏன்னா !! அதுல நானு ரொம்ப அடி பட்டுட்டேன் . எல்லாமே கெட்டவங்க இல்ல , அதையும் தெரிஞ்சிகினேன் . கவிதை + கருத்து சூப்பர் !!

    ReplyDelete
  16. என் கடந்த ரெண்டு மாசமா நீங்க எதவும் எழுதல?

    ReplyDelete
  17. Subbu,
    We are planning to meet in Amoeba at 5 pm, on 12th September, 2009.
    Try to be there on time.

    You may bring your friends along (as we would go dutch, if we have a party)

    Send me an email soon or ping me on gtalk.

    ReplyDelete
  18. யாருக்கு இப்படி ஒரு ”டா”.

    உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வலைப்பக்கம் வாருங்கள்!

    ReplyDelete
  19. அன்பு நண்ரே...

    தாங்கள் என்னிடம் கேட்ட 'தாத்தா..தாத்தா.. கொஞ்சம் பொடி கொடு..' பாடலை பதிவிலிட்டிருக்கிறேன்... கேட்டு மகிழவும்...

    http://moganaraagam.blogspot.com/2009/12/blog-post_27.html

    ReplyDelete
  20. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
    www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    ReplyDelete